வங்கி அதிகாரியான தமன்னா

SIBY HERALD
நடிகை தமன்னா கடைசியாக நடித்த நா நுவ்வே படம் படு தோல்வி அடைந்துள்ளது. கல்யாண் ராம் ஜோடியாக தமன்னா நடித்த இந்த படத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் தமன்னா. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பி இருந்ததால் இப்பொழுது நொந்து போயுள்ளார். அடுத்ததாக தமன்னா நடிப்பில் வரவிருக்கும் படம் கண்ணே கலைமான்.



இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா உதயநிதி ஸ்டாப்களின் ஜோடியாக நடித்துள்ளார். முன்னொரு காலத்தில் தமன்னா முன்னணி நடிகையாக இருக்க வளர்ந்து வந்த கதாநாயகனாக உதய இருந்த பொது அவரது நண்பேன்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் தமன்னா. இன்றோ அதே உதயநிதிக்கே ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் சீனு ராமசாமியுடன் தமன்னாவுக்கு இரண்டாவது படம் ஆகும்.



முதல் படம் விஜய் சேதுபதியுடன் இனைந்து நடித்த ஹிட் படமான தர்மதுரை. கண்ணே கலைமானே படத்தில் தமன்னா நீருக்குள் விழுந்த பூவை போல மென்மையான ஒரு நடிப்பை வழங்கி உள்ளதாக சீனு கூறியுள்ளார். அவரது நடிப்பு கண்ணே கலைமானே படத்தின் பெரிய பலம் என்றும் அவரது நடிப்பிற்காக தனது நன்றிகளை கூறுவதாகவும் சீனு ராமசாமி நெகிழ்ந்துள்ளார். இந்த படத்தில் தமன்னா ஒரு வங்கி அதிகாரியாக மதுரை பெண்ணாக நடித்துள்ளார். 


Find Out More:

Related Articles: