பிரபுதேவாவின் அடுத்த நாயகி

SIBY HERALD
மதுரைக்கார பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகம் ஆகியவர். இப்படத்தின் பாடலான அடியே அழகே பாடலின் மூலம் தான் இன்று வரை அனைவராலும் அறிய படுகிறார். ஏன் என்றால் இப்படத்தின் பின் இவர் நடித்த படமான பொதுவாக எம்மனசு தங்கம் படு தோல்வியை அடைந்தது. 


மேலும் இவரது மூன்றாவது படமான டிக் டிக் டிக் பல மாதமாக வெளியாகாமல் தாமதமாகி இந்த மாதம் இறுதியில் தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் விஜய் ஆன்டனியுடன் திமிரு புடிச்சவன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். 
இப்பொழுது அடுத்ததாக நடன புயல் பிரபுதேவா காவல் துறை அதிகாரியாக நடிக்கும் காக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.



இந்த படத்தை சாந்தனு நடித்த கண்டேன் படத்தை இயக்கிய முகில் இயக்க உள்ளார். தான் நடித்த தெலுங்கு படமான மெண்டல் மதிலோ உட்பட நடித்த எல்லா படமும் மொக்கையாக போகவே இந்த காக்கி படத்தில் அதிரடி கவர்ச்சி காட்டி ஆவது வெற்றி பெற வேண்டும் என்று நிவேதா பெத்துராஜ் குறியாக இருக்கிறாராம்.


Find Out More:

Related Articles: