கடைசியில் தெற்கு வந்த வித்யா

frame கடைசியில் தெற்கு வந்த வித்யா

SIBY HERALD
பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள பெண்ணாவார். இவருக்கு தமிழும் நன்றாக பேச வரும். சொல்ல போனால் இவர் பல ஆண்டுகள் முன்பு தமிழில் தான் அறிமுகம் ஆவதாக இருந்தது. ரன் படத்தில் இவரை நீக்கி விட்டு தான் மாதவன் ஜோடியாக மீரா ஜாஸ்மினை நடிக்க வைத்தார்கள்.

Image result for vidya balan


அதே போல மனசெல்லாம் படத்தில் கூட இவருக்கு பதிலாக தான் த்ரிஷா நடித்தார். பின்னர் இவர் பாலிவுட் சென்று அங்கு முன்னணி நடிகை ஆனார். தமிழ் கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவாக நடித்த டர்ட்டி பிக்ச்சர் படத்துக்கு தேசிய விருது பெற்றார்.

Image result for vidya balan


இப்பொழுது பல ஆண்டுகள் கழித்து தெற்கு பக்கம் வர இருக்கிறார் தனது முதல் தெலுங்கு படத்தின் மூலமாக. அதுவும் நடிகர் பாலக்ரிஷ்ணா ஜோடியாக என்டிஆர் வாழ்க்கை படத்தில் என்டிஆர் அவர்களின் மனைவி பசவதாரகம் ஆகா இவர் நடிக்க உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக நடிக்க ஒத்துக்கொள்ளாமல் இழுத்தடித்து வந்தவர் இறுதியாக பசவதாரகம் அவர்களின் உன்னதமான குணத்தை பார்த்து நடிக்க ஒப்புக்கொண்டாராம். 


Find Out More:

Related Articles: