2012ஆம் ஆண்டு கார்த்தி நடித்த அரசியல் காமெடி திரைப்படமான சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா சுபாஷ். இதனை தொடர்ந்து தமிழில் உதயன் என்ற படத்திலும் நடித்தார். இந்த படங்கள் எதுவும் வெற்றியை பெறாமல் போகவே கன்னட கரையோரம் ஒதுங்கினார்.
பின்னர் தெலுங்கில் ஏன் பில்லா ஏன் பில்லாதோ மற்றும் பாவா ஆகிய தோல்வி படங்களில் கதாநாயகியாக நடித்தார் ப்ரணிதா. நடித்த அணைத்து படங்களும் தோல்வி அடையவே, இண்டஸ்ட்ரியில் இருந்தால் போதும் என்று சிறு வேடங்களில் இரண்டாம் நாயகியாக வேஷம் கட்ட ஆரம்பித்தார் ப்ரணிதா.
ஜுனியர் என்டீஆர் நடித்த ரபாசா, பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த அதாரின்டிக்கி தாரெதி, மற்றும் மகேஷ் பாபுவின் ப்ரம்மோட்சவம் ஆகிய படங்களில் சமந்தா முதல் மற்றும் மெயின் நாயகியாகவும், ப்ரணிதா இரண்டாவது டம்மி நாயகியாகவும் நடித்தனர். இந்நிலையில் மீண்டும் தற்பொழுது ஹலோ குரு பிரேமா கோசமே என்ற படத்தில் ராம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, அதில் ப்ரணிதா ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக படு கவர்ச்சியான கிளாமர் தூக்கலான வேடத்தில் நடிக்க உள்ளாராம்.