சென்சாரை அதிர வாய்த்த ரெஜினா

SIBY HERALD
நடிகை ரெஜினா ஒரு வருடத்திற்கு பிறகு தமிழில் மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். கடைசியாக அவர், சென்ற ஆண்டு வெளியான மாநகரம் படத்தில் ஒரு ஹெச்.ஆர் ஆகவும் அதன் பின்னர் வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் ஒரு கவர்ச்சியான வேடத்திலும் நடித்திருந்தார்.



 இப்பொழுது திரு இயக்கத்தில் மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கவுதம் கார்த்திக் ஒரு குத்து சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் முதன் முறையாக கவுதம் கார்த்திக்குடன் இனைந்து அவரது தந்தையான கார்த்திக்கும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கு முதலில் யூ சர்டிபிகேட் தான் கொடுப்பதாக இருந்துள்ளனர் தணிக்கை அதிகாரிகள். ஆனால் இந்த படத்தில் வரும் பாடலான ஏதேதோ ஆனேனே என்ற பாடலில் ரெஜினாவின் அதிரடி கவர்ச்சியை கண்டு, அவர்கள் ஆடி போயுள்ளனர்.




இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலில் கவுதமுடன் நெருக்கமான கெமிஸ்ட்ரியை வெளி காட்டியும், டூ பீஸ் பிகினி உடையில் தோன்றியும், படு கவர்ச்சியாக ரெஜினா தோன்றி சூடேற்றி இருப்பதால், இந்த படத்திற்கு யூ/ஏ கொடுத்து விட்டனர் சென்சார். இரண்டு மணி நேரம் மற்றும் இருப்பது நிமிடம் ஓடக்கூடிய மிஸ்டர் சந்திரமவுலி திரைப்படம் ஜுலை ஆறாம் தேதி திரைக்கு வரவுள்ளது. 


Find Out More:

Related Articles: