ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என, நிற்க கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. மகேஷ் பாபு, நாகர்ஜுனா, ரவி தேஜா என தெலுங்கிலும், அஜீத், விக்ரம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழிலும், மசாலா படங்களில் ஜோடி போட்டு கலக்கி வந்த அனுஷ்கா, அருந்ததி படத்தை தொடர்ந்து முன்னணி கதாநாயகி ஆனார்.
அதுவரையில் தனது வாளிப்பான இடையழகையும், முன்னழகையும் காட்டி, கவர்ச்சி ஆட்டங்கள் மட்டுமே ஆடி வந்த அனுஷ்காவை, அவரால் ஒரு மொத்த படத்தை தூக்கி நிறுத்த முடியும் என்று அனைவர்க்கும் காட்டியது அருந்ததி. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக எடையை கூட்டி இன்று வரை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
இந்த கூடுதல் எடையுடன் பாஹுபலி மற்றும் பாகமதி போன்ற படங்களால் சூப்பர்ஹிட்கள் கொடுத்தாலும், அவர் இப்பொழுது எடையை குறைத்தே ஆனால் தான் வாய்ப்புகள், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தற்பொழுது தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கிளாமரான வேடம் என்பதால் , நிச்சயம் இடையழகை காட்டியே தீர வேண்டிய நிலையில் ,எடையை குறைப்பாரா அனுஷ்கா- பார்ப்போம்.