சங்கமித்ரா சர்க்கஸ் காரியான கதை

SIBY HERALD
பாலிவுட் நடிகை திஷா பட்டாணி, எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை படத்தில் அவரது மனைவி சாக்ஷி தோனியின் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். இப்படத்தை அடுத்து இவர், பிரபல நடிகர் ஜாக்கி ஷ்ரோபின் வாரிசான டைகர் ஷரப்போடு காதல் வயப்பட்டார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் லோபார் படத்தில் தோன்றினார்.



 இப்படத்தின் தோல்வியை அடுத்து மீண்டும் ஹிந்திக்கே ஓடிய திஷா பட்டாணிக்கு ,அவரது காதலர் டைகருடன் நடித்த பாகி 2 படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. பாகி 2 வெற்றியை தொடர்ந்து   திஷாவுக்கு, அவர் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்று அமைந்துள்ளது. தனது அடுத்த படமாக அவர் நடிக்கவிருப்பது பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கானின் அடுத்த படத்தில். 



சுல்த்தான் மற்றும் டைகர் சிந்தா ஹை படங்களை இயக்கிய அலி அப்பாஸ் சாபிர் இயக்கவுள்ள பரத் படம் தான் அப்படம். இப்படத்தில் திஷா பட்டாணி தவிர, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளார். பரத் படத்தில் திஷா பட்டாணி ஒரு சர்க்கஸ் காரியாக நடிக்கவுள்ளார் என்றும், சல்மானுடன் சேர்ந்து பல சாகச காட்சிகளில் சர்க்கஸ் வித்தைகள் செய்வார் என்றும் கூறப்படுகிறது. திஷா பட்டாணி, விரைவில் தமிழில் சுந்தர். சி யின் சங்கமித்ரா படத்தில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: