என்னது இவரா நயன்தாரா ஜோடி

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தனது அறம் மற்றும் வேலைக்காரன் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. முன்னொரு காலத்தில் சிம்பு மற்றும் ஜெய்யை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்த நெல்சன் தான் கோலமாவு கோகிலா படத்தை இயக்குகிறார்.


 இந்த படத்தில் நயன்தாரா , ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக , தனது குடும்ப சூழலால் போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் பாடலான கல்யாண வயசு பாடலின் வீடியோ வெளியானது. இப்பாடலில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நயன்தாரா பின்னல் துரத்தி துரத்தி காதலிப்பது போல காட்சியமைக்க பட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிவ கார்த்திகேயன் எழுதியுள்ளார். 



இயக்குனர் நெல்சன் முன்னர் ஒரு முறை நயன்தாராவின் ஜோடியாக யாரும் எதிர்பார்க்காத ஒருவர் நடிப்பதாக கூறியிருந்தார். அது அனிருத் ஆக இருக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இப்பொழுது ஒருவேளை யோகி பாபு தான் நயன்தாராவின் ஜோடியோ என்று குழம்பி போயுள்ளனர். 


Find Out More:

Related Articles: