ஷூட்டிங் இருந்தாலும் ஓவியாக்காக ஓடுவேன்

SIBY HERALD
சென்ற ஆண்டு முழுவதும், அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்தில் நடித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் சிலம்பரசன். ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக செல்லாதது, டப்பிங்கை பாத்ரூமில் இருந்து செய்தது, சம்பள சிக்கல்கள் என, பல பிரச்சனைகளில் அடிபட்டு ஒதுங்கியிருந்த சிம்புவின் கேரியர், இப்பொழுது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 



மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் ஸ்வாமியுடன் நடித்து வரும் சிம்பு, கடந்த சில வாரங்களாக காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரஸ்மீட் ,மற்றும் பியூஸ் மனுஷுடன் சேர்ந்து ஏரிகளை பார்வையிடல் என, அரசியல் ரீதியாகவும் பேசப்பட்டு வந்தார். 



இந்நிலையில் சமீபத்தில் பிஸியான ஷூட்டிங் இருந்தும் கூட ஓவியாவுக்காக சிம்பு ஒன்று செய்துள்ளார். ஓவியா நடிக்கும் நைண்ட்டி எம்எல் படத்திற்காக காதல் கடிக்குதே என்ற பாடலை சிம்பு சமீபத்தில் கம்போஸ் செய்துள்ளார். இந்த படத்தில் சிம்பு நான்கு பாடல்கள் போட்டு கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு மற்றும் ஓவியா இனைந்து கலந்து கொண்டதை தொடர்ந்து, சமீப காலமாக சிம்புவிற்க்கும் ஓவியாவுக்கும் காதல் என்ற செய்திகள் பரவி வருகிறது. 



Find Out More:

Related Articles: