காட்டுக்குள்ளே கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா ,அமலா

SIBY HERALD
தரமணி, அவள், துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து, சென்ற ஆண்டு நல்ல பெயர் பெற்றார் பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா. இதனை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி விழா ஒன்றில் பேசிய போது, தரமணி வெளியாகி பல மாதங்கள் ஆகியும், தன்னை தேடி ஒரு இயக்குனர் கூட வர வில்லை என்றார். 



இந்நிலையில் நேற்று இவரது அடுத்த படமான 'கா' படம் பூஜை போட்டு துவக்கப்பட்டது. அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கும்  இப்படத்தில், ஆண்ட்ரியா ஒரு புகைப்பட கலைஞராக நடிக்க, சின்ன கவுண்டர் வில்லன் சலீம் கவுஸ், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க இப்படம் காடுகளை பின்னணியாக கொண்டே படமாக்க படவுள்ளது. 
நேற்று வெளியான இப்படத்தின் புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் ,குழம்பி போய் உள்ளனர்.




காரணம், சென்ற மாதம் இதே போல காடுகளை மையமாக கொண்டு ,ஒரு அட்வென்ச்சர் படமான அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல, என்ற படமும் தொடங்கப்பட்டது. ஒரு வேளை இரண்டு படங்களும் ஒரே கதையோ என்ற குழப்பம் இருந்தாலும், அமலா தனது செகண்ட் இன்னிங்சில் கவர்ச்சி ஆட்டம் ஆடி வருவதும், ஆண்ட்ரியா சமீபத்தில், கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிப்பேன் என்று கூறியதும், ரசிகர்களுக்கு இப்படங்களில் கவர்ச்சி விருந்து நிச்சயமாக உண்டு என்ற நம்பிக்கையை தந்துள்ளது. 


Find Out More:

Related Articles: