வாய்ப்புகள் புஸ் குறைஞ்சுது ட்ரெஸ்

SIBY HERALD
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார் ரெஜினா கஸாண்ட்றா. தமிழில் கடைசியாக, வெற்றிகரமாக ஓடிய மாநகரம் படத்தில் நடித்த ரெஜினா, அதன் பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் எதுவும் ஓடவில்லை. 



க்ரிஷ்ணவம்சி இயக்கிய நக்ஷத்திரம் படத்தில் அதிரடியாக கவர்ச்சி குத்தாட்டம் ஆடியும் கூட, அப்படம் தோல்வி அடையவே, மீண்டும் வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் ரெஜினா. இந்நிலையில் தான் அவருக்கு கிடைத்தது மிஸ்டர் சந்திரமவுலி திரைப்பட வாய்ப்பு. நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது வாரிசு கவுதம் கார்த்திக் நடிக்கும் இத்திரைப்படத்தை, தீராத விளையாட்டு பிள்ளை , சமர் படங்களை இயக்கிய திரு இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.



 அப்போது அங்கு திரையிடப்பட்ட ஒரு பாடல் காட்சியில் அனைவரும் மெய்மறந்து போயினர். காரணம், ரெஜினாவின் தாராள கவர்ச்சி மழை. முன்னெப்போதும் இல்லாத வண்ணம் அதிரடியான கவர்ச்சி உடைகளில், பீச்சில் படமாக்கப்பட்ட அப்பாடலில், ரெஜினா டூ பீஸ் நீச்சல் உடையிலும், தன் மேனி அழகை காட்டும் வகையிலும் தோன்றியுள்ளதும், கவுதமுடன்  அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளதும், அனைவராலும் ரசிக்கப்பட்டது. வாய்ப்புகள் மங்கியதும் ஆடைகளும் மங்கிய நிலையில்,ரெஜினாவின் பிகினி அஸ்திரம் அவருக்கு கை  கொடுக்கிறதா என்று பார்க்கலாம். 


Find Out More:

Related Articles: