மார்பளவு வெள்ளநீரில் மூழ்கினாலும் நின்று தேசியக் கொடி ஏற்றிய அஸ்ஸாம் பள்ளி... கமல் பாராட்டு

J Ancie

மார்பளவு தண்ணீர் இருந்தாலும் நம் தேசப்பற்றுதான் முக்கியம் என எடுத்துரைக்கும் இந்த சிறந்த புகைப்படம்தான் சுதந்திர தினவிழாவின் மிகச் சிறந்த படமாகும் என்று நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.



பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகியவற்றில்  கடும் மழையால் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி அதினதின் அபாய எல்லையை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம், தூப்ரி மாவட்டத்தில், நோஸ்கராவில் உள்ள ஒரு சின்ன பள்ளியில் மார்பளவு வெள்ள நீர் இருந்துபோதிலும் பொருட்படுத்தாமல் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தது அவர்களின் சிறந்த நாட்டுப்பற்றையே காட்டுகிறது.


இந்த புகைப்படத்தை அந்த பள்ளியின் ஆசிரியர் மிஸானூர் ரெஹ்மான் சமூகவலைதளங்களில் நேற்று பதிவேற்றம் செய்தார். இதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: