கெஞ்சி அதிக காசுக் கொடுத்து ஓவியாவை மீண்டும் அழைத்து வரும் பிக் பாஸ்?

J Ancie

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா மீண்டும் வரப் போவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்துவிட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ன செய்தாலும் டிஆர்பி மட்டும் ஏற மாட்டேன் என்கிறது.


ஓவியா வெளியேறிய கையோடு ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்திவிட்டனர். ப்ரொமோ வீடியோவை கூட பார்க்க ஆள் இல்லை.

இந்த வார இறுதியில் ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.முன்னதாக வாரத்திற்கு ரூ.2.5 முதல் 3 லட்சம் சம்பளம் வாங்கினார் ஓவியா. தற்போது பிக் பாஸிடம் கூடுதல் சம்பளம் கேட்கிறாராம்.

Find Out More:

Related Articles: