இப்போ சங்கமித்ராவிலும் கட்டப்பா!!

J Ancie


`பாகுபலி' படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி'-2. வசூல் ரீதியாகவும் உலக அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது.




இந்நிலையில், `பாகுபலி' படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் கவர்ந்த சத்யராஜ்,இப்போ  மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.




தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் ஐதராபாத்திரத்தில் முன்பே தொடங்கிவிட்டதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் அதிதி ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.



Find Out More:

Related Articles: