மதம் மாறிய மகளுக்கு வாழ்த்து சொன்ன கடவுள் நம்பிக்கையில்லாத கமல்

J Ancie


புத்த மதத்திற்கு மாறிய தன் மகள் அக்ஷரா ஹாசனுக்கு, நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.




கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா. இவர் தற்போது தலை அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. ஆனால் அக்ஷரா ஹாசன அதனை மறுத்தார்.

 

இந்நிலையில் புத்த மதத்திற்கு மாறிய தன் மகளுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளது, அக்ஷரா...புத்த மதத்திற்கு மாறி விட்டாயாமே. அப்படி மாறி இருந்தால் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மதங்களைப் போல் அல்லாமல் எந்த நிப்நதனையின்றி அன்பு செலுத்த வேண்டும்.சந்தோஷக்களிப்புடன் வாழ வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: