ஓவியாவின் கட்சி.. என் செல்லக் குழந்தை ஓவி.. செல்லக்குட்டி ஓவி.. ஓவியாவுக்கோர் "கீதம்"!

frame ஓவியாவின் கட்சி.. என் செல்லக் குழந்தை ஓவி.. செல்லக்குட்டி ஓவி.. ஓவியாவுக்கோர் "கீதம்"!

J Ancie




திரைப்படங்களை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் புகழ்பெற்ற நடிகை ஓவியாவுக்கு அவரது உயிர் ரசிகர்கள் ஓவியா கீதம் எனப்படும் பாட்டை உருவாக்கி விட்டனர்.

Image result for oviya bigg boss



களவாணி, கலகலப்பு உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்களில் மட்டுமே நடித்துள்ள ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அவரது புறம்பேசாத நல்ல பண்பு, நியாயம், அநியாயத்தை பிரித்து பார்க்கும் குணம், துணிச்சல், நேர்மை ஆகியவற்றால் ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


Image result for oviya bigg boss




ஓவியாவுக்கும், ஜூலிக்கும் இடையேயான பிரச்சினை கலகம் செய்து ஜூலி மீதான கோபத்தை ஓவியா மீது தந்திரமாக திருப்பினார் ஜூலி. ஆனால் சனிக்கிழமை நிகழ்ந்த பரபரப்பு நிகழ்ச்சியில் கமல் அந்த ஜுலி ஓவியா வீடியோவை போட்டபிறகு, ஓவியா மீது தவறில்லை என்பது வெட்டவெளிச்சமாக ரைசா மற்றும் சக ஆண் போட்டியாளர்கள் தெரிந்து கொண்டனர். ஜூலியை கேவலமாக வெளுத்து வாங்கிய அந்த தருணத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஓவியாவுக்கு பெருகி வரும் ஆதரவால் அவருக்கு ஓவியா கீதம் என்ற புதுப் பாடலை உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ளனர். என் செல்லக் குழந்தை ஓவி... என தொடங்கும் அந்த பாடலை நீங்களும் கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்.

 




Find Out More:

Related Articles: