பாகுபலிக்குப்பின் பிரபாஸ் ரசிகர்களுக்கு குண்டு காத்திருக்கு!!

SIBY HERALD




பாகுபலி படம் முலம் பெரும் புகழ் பெற்ற பிரபாஸுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று கூறப்படுகிறது. பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை 28ம் தேதி ரிலீஸாகிறது. பாகுபலி 2 ட்ரெய்லர் தான் யூடியூபில் இந்திய அளவில்  அதிகம் பார்க்கப்பட்ட  பட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் பிரபாஸுக்கு கல்யாணப் பெண் பார்த்து வைத்துள்ளார்களாம்.




 இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 ரிலீஸ் இருக்கும் நேரத்தில் திருமணம் பற்றி பேசினால் அனைவரின் கவனமும் படத்தில் இருந்து திரும்பிவிடும் என நினைத்து பிரபாஸ் இது குறித்து பேசாமல் தள்ளிப்போட்டிருக்கிறாராம்.



படம் ரிலீஸான பிறகு பிரபாஸ் தனது திருமணம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: