பாகுபலிக்காக சத்யராஜ் மன்னிப்பு!!!

SIBY HERALD


பாகுபலி-2 கர்நாடகாவில் வருமா? என்ற குழப்பமான நிலை இருந்து வந்தது. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் தியேட்டரில் ரிலிஸ் ஆகும் என கர்நாடகாவில் சில அமைப்பினர் உரக்க கூறி வந்தனர்.



இதை தொடர்ந்து சத்யராஜ் இன்று 3 நிமிடத்திற்கு   ஒரு மன்னிப்பு அறிக்கையை விடியோவாக வெளியிட்டுள்ளார் . இதில் ‘நான் கர்நாடகா மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னிடம் உதவியாளராக இருக்கும் உதவியாளர் சேகரின் மொழி கன்னடம் தான்.



நான் பேசியது ஏதும் கர்நாடகா மக்கள் மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் மனம் வருந்துகிறேன், மேலும் என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் இதற்காக வருத்தம் கொள்ள வேண்டாம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.நம்மால் என் மற்றவர்களுக்கு கஷ்டம் என்று வெளியிட்டார் போலிருக்கு


Find Out More:

Related Articles: