ஜோதிக்காவும் விஜயிக்கும் என்ன பிரச்சனை???

SIBY HERALD


விஜய் 61வது படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகை ஜோதிகா. ஆனால் ஜோதிகா அப்படத்தில் இருந்து படப்பிடிப்புக்கு முந்தைய நாள் திடிரென்று வெளியேறியிருந்தார்.



உடனே சூர்யா, சிவகுமார் தான் விஜய் படத்தில் (குஷி படத்தை மனதில் வைத்து) ஜோதிகா நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்ற தகவல் பரவலாக வெளி வந்தது. அதேசமையம் பாலா படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா கமிட்டானதால் தான் ஜோதிகா விஜய் படத்தில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வந்தன.



இந்நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் ஜோதிகா இதுகுறித்து பேசும்போது, நான் ஏன் விஜய் படத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது. சூர்யா மற்றும் அப்பா (சிவகுமார்) இருவரும் விஜய் பட வாய்ப்பு வந்த போது உன்னுடைய மன விருப்பம் போல் செய் என்று தான் கூறினார்கள்.

விஜய் படத்தில் நடிப்பதாக இருந்த போதே பாலா அவர்களின் படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டேன்.படப்பிடிப்பையும் ஜுன் அல்லது ஜுலையில் நடத்திக் கொள்ளலாம் என்று முன்னே நாங்கள் முடிவு செய்துவிட்டோம் என்றார்


Find Out More:

Related Articles: