ஐதராபாத்:
மாறிட்டார்... முழுமையாக மாறிட்டார் என்று ஐதராபாத் மீடியாக்கள் கதறுகின்றன. எதற்காக தெரியுங்களா?
சமந்தா-நாக சைதன்யா இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் நடக்க உள்ளது.
சமந்தாவும் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவிற்கு நாகசைதன்யா வீட்டில் இந்து முறைப்படி சில சம்பிரதாயம் நடந்துள்ளது.
சமந்தா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் 2 மதத்தின் முறைப்படி நடக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது சமந்தா முழுமையாக இந்து மதத்திற்கு மாறியதாக தெரிய வருகிறது.
இதைதான் ஐதராபாத் மீடியா மாறிட்டார்... மாறிட்டார் என்று கதறுகிறது.