உற்று பார்த்தால் உண்மை தெரியும்... கொடி லோகோ கலக்கல்...

Sekar Tamil
சென்னை:
உற்று பாருங்க... தெரியும் என்று கோலிவுட் வதந்தி வசந்தாக்கா...சொல்லியிருக்காங்க ஒரு தகவலை... என்ன தகவல் தெரியுங்களா?


தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வருது கொடி படம். இப்படத்தின் தமிழக விற்பனை எப்போதோ முடிந்து விட்டதாம். இன்னும் சில நாட்களில் கொடி மோஷன் போஸ்டர் வர இருக்கு. இதற்கு முன்னோட்டமாக டைட்டில் லோகோ வெளிவந்துள்ளது.


டைட்டிலில் சிவப்பாக ஒன்று உள்ளது. இதை நன்றாக உற்று பார்த்தால் அந்த சிவப்பு நிறத்தில் ஒரு தனுஷ் முகம், வெள்ளை நிறத்தில் ஒரு தனுஷ் முகம் என்று தெரிகிறது. எப்படியெல்லாம் யோசிச்சு செய்யறாங்க...


சிவப்பு புரட்சியையும், வெள்ளை அமைதியையும் குறிப்பது போல் லோகோவில் சொல்லாமல் சொல்லியிருக்காங்க என்றுதான் வதந்தி வசந்தாக்கா தகவலை தூக்கி போட்டு இருக்காங்க...


Find Out More:

Related Articles: