கிடைக்கலை... கிடைக்கலை... ஹீரோயின் யாரும் கிடைக்கலை...

Sekar Tamil
சென்னை:
கிடைக்கலை... கிடைக்கலை... ஹீரோயின் யாரும் கிடைக்கலை... என்ன செய்யறது... இவங்களுக்கே இப்படி ஒரு நிலைமை என்று கோலிவிட் வதந்தி வசந்தாக்கா கொக்கரக்கோன்னு சொல்லியிருக்காங்க...


என்ன விஷயம் என்றால்... தமிழ் சினிமாவில் மாஸ், கிளாஸ் என்று இரட்டை குதிரை சவாரி செய்வதில் கில்லாடிகள் விக்ரம், சூர்யா இருவரும். ஒரு பக்கம் கமர்ஷியல் ஹிட் கொடுத்தா... அடுத்து கிளாஸா ஒரு படம் கொடுப்பாங்க...


இவங்க கூட நடிக்க எப்போதும் நடிகைகள் போட்டி போடுவாங்க... இப்ப இவங்க 2 பேரும் நடிக்கும் படத்திற்கு ஹீரோயின்கள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பா இருக்காம். இருமுகன் என்ற மாஸ் ஹிட்டை கொடுத்த விக்ரம் அடுத்து கருடா, சாமி-2 என்று 2 படங்களில் நடிக்கிறார்.


இதேபோல் சூர்யா "தானா சேர்ந்த கூட்டம்" மற்றும் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக ஹீரோயின் வேட்டை நடந்து வருதாம. ஆனால் பஞ்சமோ... பஞ்சம்... ராஜஸ்தான் பாலைவனம் போல் வெறுமையாம். 


தற்போது இருக்கும் ஹீரோயின்கள் எல்லோருக்கும் 30 ஆவதால் இளம் நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்காம். இதனால் கீர்த்தி சுரேஷ் காட்டில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்காங்க வதந்தி வசந்தாக்கா... அது சரி ஒரே ஆள் எம்புட்டு படத்தில் நடிக்க முடியும்.



Find Out More:

Related Articles: