காதலில் விழுந்தார்... பாலிவுட் நடிகரின் இதயத்தில் விழுந்தார்...

Sekar Tamil
சென்னை:
இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல.... அதையும் தாண்டி என்று பாடியவரின் மகள் இன்று காதலில் விழுந்து விட்டார் என்று பாலிவுட் வட்டாரங்கள் பற்ற வைத்துள்ளன.


அட நம்ம உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை பற்றிதான் இப்படி ஒரு செய்தி பறந்து வருகிறது. ஸ்ருதிஹாசன் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று பறந்து பறந்து நடித்து வருகிறார். சர்ச்சைகளில் சிக்குவது என்றால் இவருக்கு அல்வாவை "லபக்" என்று சாப்பிடுவது போல்.


இந்த முறை இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டு செம ஹாட்டை கிளப்பி உள்ளது. என்னன்னா? பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரை, ஸ்ருதி "லவ்"வி வருகிறாராம்.


சமீபத்தில் இருவரும் ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடித்தனர். இதில் இருவருக்கும் பற்றிக் கொண்டது என்று சொல்லியிருக்காங்க.


Find Out More:

Related Articles: