அடுத்த படத்தில் ஒப்பந்தமாகும் விஜய் சேதுபதி

Sekar Tamil
அண்மையில் விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து, பலரது பாராட்டுகளையும் வென்றது. 


இதையடுத்து வரும் செப்டம்பர் 23-ந்தேதி, மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் வெளிவருகிறது.


இந்த படத்தை தொடர்ந்து, அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'ரெக்க' வரும் அக்டோபர் 7-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் அவர் தற்போது கே.வி.ஆனந் இயக்கும் திரைப்படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அவர் 'ரேணிகுண்டா' திரைப்பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை, தற்போது இயக்குனர் பன்னீர் செல்வம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.


Find Out More:

Related Articles: