சென்னை:
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆசையில் அறிமுகமாகி அதகளம் செய்த மகா நடிகர் நடிக்க உள்ளார் என்று உளவு பார்த்த செய்தியை கோலிவுட் உளவாளி உலகநாதன் சொல்லியிருக்காருங்க...
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகிவிட்டார். அவரது ரேஞ்ச் இப்போது மாறிக் கொண்டே இருக்கிறது. ஆரம்பம்...
சிறிதாக இருந்தாலும் இப்போது அதகளம் செய்யும் நடிகராக மாறியே விட்டார். இவரது கோலிவுட் கிராப் எகிறி கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இவர் மோகன்ராஜா இயக்கும் படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாரா, மலையாள ஸ்டார் பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்போது இந்த நட்சத்திர பட்டாளத்தில் ஒரு பளபளப்பான நட்சத்திரம் அட அதாங்க செல்லமே... ஐ லவ்யூன்னு சொல்லி கலங்கடித்த பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளாராம்.
மோகன்ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் என்று நடிப்பில் அடுத்த பரிணாமத்தை காட்டிய பிரகாஷ்ராஜ் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகிறார். அப்ப படம் செம டாப்புதான் என்று சொல்லுங்க...