விஜய்... தனுஷ் பாடலை போடுங்க... விரும்பி கேட்ட விக்ரம்...!

frame விஜய்... தனுஷ் பாடலை போடுங்க... விரும்பி கேட்ட விக்ரம்...!

Sekar Tamil
சென்னை:
ரசிகர்கள் இவரை கொண்டாட... இவரே... அவர்களின் பாடல்களை போடச்சொல்லி கேட்டார் பாருங்க... அதுதான் இப்போ ஹைலைட்.


விக்ரம் நடித்த இருமுகன் படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லாவை ரொப்பு ரொப்பு என்று ரொப்பி வருகிறது. இதில் சீயான் விக்ரமின் லவ் என்ற கேரக்டரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.


கொடுத்த உழைப்பை இப்போது அறுவடை செய்து வருகிறார் சீயான். ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் இருந்த அவருக்கு இருமுகன் கொண்டாட்டத்தையே கொடுத்து விட்டது.


இந்த படத்தின் புரொமோஷனுக்காக சீயான் விக்ரம் கேரளாவுக்கு சென்றிருந்தார். அப்போது ஒரு கல்லூரியில் 2000 ரசிகர்கள் மத்தியில் விக்ரம் கலந்துரையாடினார். அங்குதான் நடந்தது ஒரு சுவாரஸ்யம். என்ன தெரியுங்களா? 


அந்நியன் பட பாடலை போட்டு நடனம் ஆடுமாறு விக்ரமை ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? ஒரு நல்ல விஜய்யோட குத்து பாடல் போடுங்க, இல்லாட்டி தனுஷின் டங்கா மாரி பாடல் போடுங்க என்று கேட்டார் பாருங்க... இப்போ இதுதான் கேரளாவில் டாக் ஆப் த மேட்டராக உள்ளது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More