சென்னை:
ரசிகரின் கமெண்டுக்கு கல்லால் அடித்தது போல் பதில் கொடுத்து வாயடைக்க செய்துள்ளார் அமலா பால்.
என்ன விஷயம் என்றால்... தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரை பெற்றுவிட்டார் அமலாபால். இவருக்கும் இவரது கணவர் இயக்குனர் விஜய்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவகாரத்து செய்ய உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமலாபால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. இந்த படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்ய, இதற்கு கல்லால் அடித்தது போல் அமலாபால் தன் டுவிட்டரில் "நச்" விளக்கம் கொடுத்துள்ளார்.
என்ன தெரியுங்களா? முதலின் உங்கள் பார்வையை நல்லவிதமாக மாற்றி கொள்ளுங்கள். பெண்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.