சென்னை:
வெற்றிக் குயின்... சக்ஸஸ் ஏஞ்சல் என்று இனி கோலிவுட் வட்டாரங்கள் நயன்தாராவை அழைத்தால் அது மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏன் தெரியுங்களா? இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகி உள்ளன. இதற்கு இருமுகன் படம் சமீபத்திய சாட்சியாகும். இந்த படம் வசூல் சக்கை போடு போட்டு வருகிறது. விரைவில் இந்த படம் ரூ.100 கோடியை அள்ளும் என்றும் சொல்கிறார்கள்.
தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக மாறி வருகிறது.
இதற்கிடையில் நயன்தாரா நடித்து வரும் டோரா என்ற திரில்லர் படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை யார் கைப்பற்றி இருக்காங்க தெரியுங்களா? இருமுகன் படத்தை வெளியிட்டு செம லாபம் பார்த்துள்ள... ஆரா சினிமாஸ்தான் டோரா விநியோகத்தையும் கைப்பற்றி உள்ளதாம்.