சோப்பு விளம்பரம்... நடித்த போது வெள்ளத்தில் சிக்கி நடிகர் பலி

frame சோப்பு விளம்பரம்... நடித்த போது வெள்ளத்தில் சிக்கி நடிகர் பலி

Sekar Tamil
ரியோ டி ஜெனீரோ:
சோப்பு விளம்பரத்தில நடித்த போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நடிகர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பிரேசிலை சேர்ந்த பிரபல நடிகர் டோமிங் கோஸ் மாண்டேக்னெர். இவர் ஒரு சோப்பு விளம்பரத்திற்காக செர்ஜிப் மாகாணத்தில் கானின்டே நகரில் ஓடும் சாவ் பிரான்சிஸ்கோ ஆற்றில் குளிப்பது போன்ற காட்சியில் நடித்து கொண்டிருந்தார்.


இவருடன் நடிகை கமீலா பிடாங்கா என்பவரும் நடித்தார். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வர இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.


இதில் நடிகை கமீலா ஒரு பாறையை பிடித்துக் கொண்டு தப்பிக்க... டோங்கோசை நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் பல மணி நேரம் கழித்து 2 பாறைகளுக்கு இடையே சிக்கி கிடந்த அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More