சென்னை:
ஜப்பானிலும் தமிழ்... தமிழர்களுக்கு பெருமை மேல் பெருமை சேர்க்கிறார் ஏ.ஆர்.ரகுமான். விஷயம் என்னன்னா?
ஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானை வரவேற்று தமிழில் வரவேற்பு அட்டைகளை வைக்கப்பட்டிருந்ததுதான் விஷயம்.
ஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘புகுவோகா’ விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை வாங்க ஏ.ஆர்.ரகுமான் ஜப்பான் சென்றார்.
அங்குதான் நெகிழ்ச்சியான இந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன தெரியுங்களா? விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அவரை இளைஞர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட வரவேற்பு அட்டைகளை வைத்திருந்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்க... அதில் ‘ரகுமான் அவர்களே வருக வருக’. ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
தமிழர்க்கு பெருமையோ... பெருமைதானே... வாழ்த்துக்கள் ஆஸ்கர் நாயகனே...