சென்னை:
நம்பியவர்களை வாழ வைத்துதான் "தல"க்கு பழக்கம். அதேபோல்தான் தற்போதும் ஒரு விஷயம் நடந்துள்ளது.
மகா... மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது "தல"யின் படம். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை வெகு வேகமாக முடித்து கொடுத்துள்ளாராம் தல. இரவு, பகல் பாராது சிரமத்தை நினைக்காமல் முதல்கட்ட படப்பிடிப்பை சொன்ன நாளுக்கு முன்பே முடித்து விட்டாராம். காரணம் வெளிநாடுகளிலேயே முழு படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பட்ஜெட் எகிறிவிடாமல் இருக்க இப்படி முழு மூச்சாக உழைத்துள்ளார் தல என்கின்றனர்.
தன்னை நம்பியவர்களை என்றும் கைவிடமாட்டார் என்பதை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார் தல... தல... தலதான் போங்க...