அவருக்கு பிறகு இவர்தான்... இவரேதான்... இயக்குனர் "வாய்ஸ்"

Sekar Tamil
சென்னை:
அவருக்கு பிறகு இவர்தான்... இவர்தான் என்று இயக்குனர் ஒருவர் கூறியதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்புக்கு காரணமாகி உள்ளது. 


யாருக்கு பிறகு யார் என்று தெரியுங்களா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கோ...கிங்... என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கபாலி படத்தின் வசூலை இனி ரஜினியே முறியடித்தால்தான் உண்டு. 


இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி தன் மனதில் இருந்த ஒரு விஷயத்தை ஓப்பனாக சொல்லியிருக்கார். என்னன்னு தெரியுங்களா? ‘தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு ஒவ்வொரு படத்திற்கும் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் வருவது "தல" அஜித்திற்கு தான் என்று.


இவரது திறமையை நான்கூட முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்போது அவர் நடித்து வரும் படம் அவரது முழுமையான திறமையை வெளிப்படுத்தும் என்று சொல்ல... நெட்டில் இப்போது இதுவே செம பேமஸ் டாக் ஆகி உள்ளது. அப்போ... எங்க "தல"தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நெட்டிசன்கள் கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.



Find Out More:

Related Articles: