'எஸ்-3' திரைப்படத்தை அடுத்து சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெயரிடப்படாத இந்த படம் அவர் நடிக்கவுள்ள 35-வது திரைப்படமாகும்.
இதையடுத்து அவர் நடிக்கவுள்ள 36-வது திரைப்படத்தை தயாரிப்பது, குறித்த தகவல், தற்போது வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்து, மாபெரும் வெற்றியடைந்த ஜோக்கர் மற்றும் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'காஷ்மோரா' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்டர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
இந்த தகவலை 'ட்ரீம் வாரியர்' உரிமையாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.