சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010-ம் ஆண்டு, தொழிலதிபர் ராம்குமார் அஸ்வினை மணந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில், விரிசல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்த வாழ முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பல்வேறு செய்திகள், இணையதளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் உண்மை தான் என்று சவுந்தர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில், 'என்னுடைய திருமண வாழ்வு குறித்த செய்தி உண்மை தான். நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றோம். விவாகரத்து பெறுவது, குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறோம். அதனால் எனது சொந்த வாழ்க்கையில், பிறர் தலையிடுதலை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்'.
இவ்வாறு அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.