11 வருடங்களுக்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நயன்தாரா

frame 11 வருடங்களுக்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நயன்தாரா

Sekar Tamil
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா, சூர்யாவுடன் இணைந்து 'கஜினி' திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து எந்த திரைப்படமும் நடிக்காது இருந்து வந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


அகிரா திரைப்படத்திற்கு பிறகு முருகதாஸ், மகேஷ் பாபு நடிக்கும் பெயரிடப்படாத புது படத்தை இயக்குகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்குவில் உருவாகுகிறது. இதில் ஏற்கனவே ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்து வருகிறார்.


தற்போது இந்த படத்தின் இன்னொரு முக்கியமான ரோலில், நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா ஏற்கனவே 'டோரா', 'இமைக்கா நொடிகள்' மற்றும் மீஞ்சூர் கோபியின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ள கதாப்பாத்திரம் குறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More