சென்னை:
நெருப்புடா... நெருப்புடா... பாடியவர் இப்போது யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
யார் என்று தெரிகிறதா? கபாலியில் நெருப்புடா பாடிய அருண்ராஜா காமராஜ்தான்... அவர். இவர் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது... “யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான். அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்று செம மகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்.