சென்னை:
இனி மனிதாபிமானம் குறித்து பேசி என்ன பயன் என்று வேதனையுடன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து கர்நாடகாவில் தமிழர்களின் சொத்துக்களுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? "இந்திய இறையாண்மை", "வேற்றுமையில் ஒற்றுமை" இவையெல்லாம் மூடத்தனம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இனி மனிதாபிமானம் குறித்தெல்லாம் என்ன பேசி என்ன பயன்? என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.