விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Sekar Tamil
'தெறி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் 'பைரவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி நிலையில் உள்ளது. 


இந்நிலையில் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில், நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படம் 'தெறி - 2' வா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளரை, தற்போது அட்லீ பரிசீலினை செய்துள்ளார். 


அவர் யார் தெரியுமா? தெரியாதா...இதோ வரேன்... 'தெறி' திரைப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் தான் இந்த புதிய படத்தின் இசையமைப்பாளராம். தெறி திரைப்படத்தில் அவர் சிறப்பாக இசையமைத்ததால், அவரையே அட்லீ தனது அடுத்த படத்திற்கும் புக் செய்துள்ளார். 


மேலும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லைவிரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: