அவர் தூக்கி விட... இவரு கவுத்துவிடுவார் போல... ரத்னம் புலம்பல்

Sekar Tamil
சென்னை:
அவர் கை கொடுத்து தூக்கி விட நீ ஏம்மா... இப்படி சரிச்சு விடுறேன்னு புலம்புகிறார் ஒரு தயாரிப்பாளர். இதுதான் விஷயம்னு வதந்தி வசந்தா மேட்டரை சொல்லியிருக்காங்க...


என்னன்னா? அஜித்திற்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவரை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று பார்ப்பார். இதனால்தான் மிகவும் சிரமத்தில் இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் என்று நடித்து கொடுத்து கை கொடுத்தார்.


இதையடுத்து நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் ரத்னம் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தார். இதற்குள் நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்க சென்றுவிட்டார். இதனால் விழிபிதுங்கி போய் கிடக்கிறாராம் ரத்னம். இதனால் இந்த விவகாரம் சீக்கிரம் பஞ்சாயத்திற்கு வரும் என்று சொல்றாங்க... சொல்றாங்க...



Find Out More:

Related Articles: