ஒற்றை பாட்டுக்கு ஆட்டம்... கேதரின் தெரசா ஓகே... ஓகே...

Sekar Tamil
ஐதராபாத்:
சென்னை படத்தில் அசத்திய கேதரின் தெரசா... இப்போ அக்கட தேசத்து சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட போகிறார் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


அட ஆமாங்க... சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம் கேதரின் தெரேசா என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இதில் காஜல் அகர்வால், தருண் அரோரா நடித்து வருகின்றனர். விவி விநாயக் படத்தை இயக்கி வருகிறார். அதிரடி மாஸ் அண்ட் கிளாஸாக இந்த படம் உருவாகி வருகிறதாம். இப்போதே இந்த படத்தின் விற்பனை அமோகமாம்.


 இப்படத்தில் ஒரு பாடலுக்கு கேதரின் தெரேசா ஆடினால் நன்றாக இருக்கும் என்று படக்குழு எண்ண உடனே அவரிடம் பேசி உள்ளனர். சிரஞ்சீவி காரு படமா... அப்ப ஓகே என்று உடனே ஒப்புக்கிட்டாராம். பேமெண்ட் எவ்வளவும்மா... அதை மட்டும் சொல்ல மாட்டீங்களே...


Find Out More:

Related Articles: