சோலார் வழக்கில் சிக்கிய ஷாலுமேனனுக்கு திருமணம்...

Sekar Tamil
கேரளா:
சோலார்பேனல் மோசடியில் சிக்கிய நடிகை ஷாலுமேனன் டி.வி. நடிகரை மணந்தார்.


கேரளாவை சேர்ந்தவர் பிரபல மலையாள நடிகை ஷாலுமேனன். இவர் மலையாள டி.வி. தொடர்கள் மற்றும் சினிமாவில் நடித்து வந்தார். சிறந்த நடனக்கலைஞரும் ஆவார்.


இவரது வாழ்வில் சோலார் பேனல் வைத்தது ஆப்பு.  இந்த வழக்கில் கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட... இந்த மோசடியில் உடந்தை என்று நடிகை ஷாலுமேனனும் சிக்கினார். கைதும் ஆனார். 


பின்னர் ஜாமீனில் வந்த  ஷாலுமேனன் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருக்கும் மலையாள டி.வி.
நடிகர் சஜி ஜி.நாயர் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கோவிலில் நடிகை ஷாலுமேனன்-சஜி ஜி.நாயர் திருமணம் நடைபெற்றது.


Find Out More:

Related Articles: