ஜிவி உடன் கைகோர்த்த நடிகை சுரபி

Sekar Tamil
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடித்த நடிகை சுரபியை ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு.... 


'இவன் வேற மாதிரி' திரைப்படத்தில் நடித்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் சில படங்கள் நடித்து வருகிறார். இவர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடித்த பிறகு, ஜெய் உடன் 'புகழ்' படத்தில் நடித்தார். 


இதையடுத்து இவருக்கு தமிழில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் முதன்முறையாக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள 'அடங்காதே' திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷண்முக முத்துசாமி இயக்கவுள்ளார். இதில் ஜிவி பிரகாஷ், சரத் குமார், தம்பி ராமையா, ‘நெருப்புடா’ புகழ் அருண் காமராஜ் ஆகியோரும் நடிக்க உள்ளனர். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 


மேலும் இப்படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: