தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள் சமந்தா, காஜல் அகர்வால். இந்நிலையில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த ''ஜனதா கராஜ்'' தெலுங்கு திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும், ஜூனியர் என்.டி.ஆர் உடன் காஜல் குத்தாட்டம் ஆடினார். இந்த பாடல் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. காஜலின் எக்ஸ்பிரஷன் மற்றும் ஆட்டத்தை தற்போது அனைவருமே புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இது சமந்தாவிற்கு பிடிக்கவில்லை. படத்தில் நாயகியாக நடித்த என்னை யாருமே புகழவில்லை. ஐட்டம் டான்ஸ் ஆடிய அவரை இப்படி எல்லோரும் புகழ்கிறார்களே.
மேலும் படக்குழுவினர், காஜலை வைத்து, போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர். இது சமந்தாவின் கோபத்தை மேலும் அதிகரிக்க செய்தது. நான் தான் படத்தின் ஹீரோயின் எனக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காஜலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்று கோபித்து கொண்டார்.
இதனால் அவர் கடந்த வாரம் ஜனதா கராஜ் குழு கலந்து கொண்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேட்டிக்கு வரவில்லை.