தெறி... தெறிக்கவில்லை... ஆங்கில தளத்தின் செய்தியால் டென்ஷன்

Sekar Tamil
சென்னை:
கத்திரிக்காய் நல்ல விலைக்கு போனா... கேரட் கோபப்படுமாம் என்பது போல்தான் நடந்துள்ளது இந்த விஷயமும்.


என்னன்னா? தெறி படம் வசூலில் போட்ட போடு அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஆண்டு தொடக்கத்தில் வசூல் மன்னன் ஆனார் நடிகர் விஜய் என்றால் அது மிகையில்லை. வசூலில் சாதனை படைத்த படம் இது.


ஆனால், இப்படம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தோல்வியடைந்ததாக பிரபல சினிமா ஆங்கில தளம் ஒன்று பற்ற வைத்துள்ளது. சில நாட்களாகவே தெறி பற்றி பேசப்பட்டு வரும் வதந்தி இது. காரணம் விஜய்யின் அடுத்த படம் பரபரவென்று சூட்டிங் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற வதந்தி அந்த படத்தின்வியாபாரத்தை பாதிக்கும்.


ஆனால் விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் வந்த படம் தெறி தான் என்பது கோலிவுட்டை சேர்ந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ஆங்கில தளத்தில் வந்த செய்தி விஜய் ரசிகர்களை கொதிக்க செய்துள்ளது.



Find Out More:

Related Articles: