விரைவில் வில்லன்... வில்லன்... தனுஷ் ஏற்படுத்திய ஆச்சரியம்!

Sekar Tamil
சென்னை:
பார்க்கத்தானே போகிறீர்கள்... விரைவில் இது நடக்கும் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் என்ற அணுகுண்டை பற்றவைத்துள்ளார். யாருங்க... என்கிறீர்களா?


இவர்தாங்க... தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் பட்டியலில் முன்னணியில் இடம் பிடித்துள்ள தனுஷ்தான் அவர். விஷயம் என்னன்னா?
 இவர் ஹாலிவுட் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்த விஷயம். தெரியாத விஷயம்... இவர் விரைவில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதுதான். 


பிரபல தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், வில்லன் வேடத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்குதான் தனுஷ் இப்படி பதில் சொல்லி ரசிகர்களை ஆனந்தத்தில் மூழ்கடித்துள்ளார்.


விரைவில் முழு வில்லனாக பார்ப்பீர்கள் என்று அதிரடி பதிலை சொல்லியுள்ளார். விரைவில் தனுஷையும் வில்லன் வேடத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 



Find Out More:

Related Articles: