ரஜினி படத்தில்....த்ரிஷாவா...நயன்தாராவா....

Sekar Tamil
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது '2.0' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். இதன் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்னும் 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. 


இந்நிலையில், ரஜினி தனது அடுத்த படத்தில் நடிக்க தற்போது தயாராகி வருகிறார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இரண்டாவது முறையாக ரஜினியுடன், ரஞ்சித் இந்த படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளார். 


மேலும் நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இதில்  ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையை தற்போது படத்தரப்பு, பரிசீலினை செய்து வருகின்றனர். 


இந்நிலையில் ரஜினியுடன் 'குசேலன்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நயன்தாராவே, இதில் நடிக்கவுள்ளார் என ஒரு சிலர் கூறிவருகின்றனர். இன்னொரு பக்கம் ரஜினியுடன் இணைந்து நடிப்பதை கனவாக வைத்துள்ள, நடிகை த்ரிஷா தான் இந்த படத்தின் கதாநாயகி என்று கூறி வருகின்றனர்.


பெயரிடப்படாத இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு தற்போது கோலிவுட்டில் அதிகரித்து வருகின்றது.


Find Out More:

Related Articles: