15 நாட்களில் முடியுதாம்.....சர்வர் சுந்தரம்...

frame 15 நாட்களில் முடியுதாம்.....சர்வர் சுந்தரம்...

Sekar Tamil
நடிகர் சந்தானம் 'தில்லுக்கு துட்டு' திரைப்படத்தை அடுத்து, 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. 


பழம்பெரும் நடிகர் நாகேஷ் நடித்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் பாணியில், இப்படம் உருவாகி வருவதால், இதில் டைமிங் காமெடி அதிகம் நிறைந்துள்ளதாம். 


மேலும் இதன் கிளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் தொடர்வதாக தகவல்கள் வந்துள்ளன.


மேலும், சர்வர் சுந்தரம் திரைப்படத்திற்கு சந்தானம் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதால், இந்த படம் பல விருதுகளை தழுவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More