வேலையை குறைக்க விரும்பினேன்... திருமணம் செய்தேன்...

Sekar Tamil
மும்பை:
வேலையை குறைத்து ரிலாக்சாக இருக்க விரும்பினேன். இதனால் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டேன் என்று ஓப்பன் டாக் விட்டுள்ளார் இவர்.


யார் தெரியுங்களா? பாலிவுட் நடிகை கஜோல்தான் அவர். சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் போது சட்டென்று முடிவெடுத்தார். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்போதும் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தன் திருமணம் பற்றி கஜோல் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? நான் 8 முதல் 9 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுக்கு 4 முதல் 5 படங்கள் தொடர்ந்து நடிப்புதான். ஆனால் எனக்கு இதுபோல் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லை. திருமணம் செய்து கொண்டு ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என்று முடிவு செய்து அஜய் தேவ்கனை மணந்தேன் என்றாரே பாருங்க...


இதைவிட அடுத்ததாக கூறியதுதான் பெரிய ஹைலைட்... என்னன்னா? வேலையை குறைத்து ரிலாக்ஸாக இருக்க விரும்பினேன் என்றாரே பாருங்க...


Find Out More:

Related Articles: