மனோ பாலாவுடன் இணைந்த அரவிந்த் ஸ்வாமி

Sekar Tamil
கடந்த 2014-ம் ஆண்டு, மனோபாலா தயாரிப்பில், வினோத் குமார் இயக்கத்தில் 'சதுரங்க வேட்டை' திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியன் மற்றும் இஷாரா நாயர் ஆகியோர் நடித்தனர். 


ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, தற்போது உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதில் அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க போகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த படத்தில் அரவிந்த் ஸ்வாமி நடிக்கவுள்ளார் என அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 


'சதுரங்க வேட்டை - 2' திரைப்படத்தில் அரவிந்த் ஸ்வாமி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வினோத் குமார் இயக்கி, மனோபாலா தயாரிக்கவுள்ளார். 


மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: