அதர்வா படத்தில் நயன்தாரா....

Sekar Tamil
சிவகார்த்திகேயன் நடிக்கும் புது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது அதர்வா உடன் இணைந்து ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார். இதுபற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.... 


'டிமாண்டே காலனி' திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்து, 'இமைக்கா நொடிகள்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். 


இதில் அதர்வாவின் ஜோடி நயன்தாரா இல்லை என்பதை இயக்குனர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ரொமான்டிக், திகில் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. 


இந்த படத்தை 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' திரைப்பட இயக்குனர் ஜெயக்குமார் தயாரிக்கவுள்ளார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையை படக்குழுவினர் தற்போது பரிசீலினை செய்து வருகின்றனராம். 


அதனால், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: